ஒலி இல்லா தீபாவளி!

Source: Raj
தீபாவளி பண்டிகையையொட்டி, இரவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு . காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். ஆனாலும் பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து உள்ளனர் நீதிபதிகள். தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! தருகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.
Share



