SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

CC
Source: Raj

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 95 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மட்டும் அல்லாமல் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 67 ஆயிரத்து 720 ஓட்டுச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஒழுங்காக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ததாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இரவு திடீரென அறிவித்தது. வேலூர் தொகுதியில் அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வை!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now