SKIP TO MAIN CONTENT

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அறிவிப்பாணை இரத்து

CC
Source: Raj

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் காட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், அரசு நிலம் என்று ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்களை எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்து வரும் அதே நேரத்தில் அதன் கூட்டணி கட்சியான பாமக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது நோக்கத்தக்கது. 8 வழிச்சாலை சாலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? இது குறித்து ஒரு பார்வை!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now