திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் 75-ம் ஆண்டு நிறைவு விழா (பவள விழா) சென்னையில் நேற்று நடை பெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழா திமுகவினருக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் உச்ச கட்ட குழப்பங்கள் நிலவி வரும் வேளையில், முரசொலியின் பவள விழா கொண்டாட்டங்கள் களை காட்டியது. நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் கமலஹாசன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் பதவி தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.