SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மீண்டும் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். மோதல்

தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் எனக்கூறி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share