மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சால் சர்ச்சை!

Source: Supplied
சென்னையில் யூ-டியூப் சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்மம் மற்றும் பெண்கள் குறித்து பேசிய பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் குறித்து திருமாவளவன் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று பாஜக மற்றும் அதிமுக ஆகிய காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே நேரம், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் காட்சிகள் திருமாவளவனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தன. இது போன்ற சூழ்நிலையில் மனு தர்மத்தைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்!
Share