SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழக அரசுப் பள்ளிகள் தனியாரிடம் தரப்படுகிறதா?

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியார்களிடம் நிதியுதவி பெறும்விதமாக `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவாரங்களுக்கு முன் தொடங்கிவைத்தார். ஆனால் `நம்ம ஸ்கூல்” திட்டமானது அரசுப் பள்ளிகளை அரசு அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் என்றும் இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share