SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு திமுக மௌனம் காக்கிறதா?

திமுக ஆட்சியில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் பல வகையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக புதுக்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் குடிநீரில் சிலர் மலத்தை கலந்தனர். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்று இரு வாரங்கள் கடந்துள்ள போதும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. திமுக அரசு யாரை காப்பாற்ற செயல்படுகிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share