தமிழகத்தில் தொடரும் விஜய் சேதுபதி சர்ச்சை

Source: Supplied
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது தொடர்பாக அல்லது விலகுவது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லாமலேயே தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் முரளிதரன் அறிக்கையை ஷேர் செய்து நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இந்த பதிவின் மூலம் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கமாட்டார் என்று கருத்தப்படுகிறது. இந்த சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில் விஜய்சேதுபதியின் மகளை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் சில விரும்பத்தகாத பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்! கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !
Share