Super Singer இலிருந்து பின்னணிப் பாடகராகிய சந்தோஷ் ஹரிஹரன்
Santosh Hariharan
விஜய் தொலைக்காட்சியின், Super Singer 3 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவரும், தற்போது புகழ் பெற்றுவரும் பின்னணிப் பாடகருமான சந்தோஷ் ஹரிஹரன் எம்முடன் உரையாடுகிறார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 20 திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார் சந்தோஷ். ஆனால் முறையான சங்கீதம் கற்காத அவர், பாடகர் ஷங்கர் மகாதேவனை மானசீக குருவாக வைத்துப் பாடிவருகிறார். தனது பின்னணி அத்துடன் அனுபவங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார் பின்னணிப் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன். பின்னணிப் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன், நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக் குழுவினருடன் இணைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விக்டோரிய கிளை வழங்கும் இராப் போசனத்துடனான கானமழை இசை நிகழ்ச்சி Melbourne நகரில் நடைபெறவுள்ளது.காலம்:இம்மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்:Kingston City Hall (Moorabbin Town Hall)(979-985 Nepean Hwy, Moorabbin - 100 meters from Train station, Melways: 77 D5) தொடர்புகள்:Rajan - 0421 594 110, Sujan - 0418 357 408Vijey - 0421 789 517, Suthan - 0466 169 656.
Share



