COVID தடுப்பூசியினால் ஏற்படும் பாதகமான எதிர்விளைவுகளுக்கு அரசு இழப்பீடு

cc

The COVID-19 Vaccine Claims Scheme will compensate those patients who suffer adverse reactions from an approved COVID-19 vaccine or its administration. Source: Getty Images

COVID-19 தடுப்பூசி தொடர்பிலான adverse reactions - பாதகமான எதிர்விளைவுகள் காரணமாக ஏற்பட்ட வைத்தியசாலைக் கட்டணம் போன்ற மருத்துவச் செலவுகள், வருமான இழப்பு போன்றவற்றினை ஈடுசெய்யும் நோக்குடன் COVID-19 Vaccine Claim Scheme எனும் திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்குக் கடுமையான பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்ட மக்கள், இழப்பீடு பெறுவதற்கான ஒரு திட்டத்தினை federal அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 தடுப்பூசி தொடர்பிலான  பாதகமான எதிர்விளைவுகள் காரணமாக ஏற்பட்ட வைத்தியசாலைக்  கட்டணம் போன்ற மருத்துவச் செலவுகள், வருமான இழப்பு, நிரூபிக்கப்பட்ட பாதகமான எதிர்விளைவுடன் தொடர்புடைய வலி மற்றும் துன்பம் போன்றவற்றினை ஈடுசெய்யும் நோக்குடன் COVID-19 Vaccine Claim Scheme எனும் இத்திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி தொடர்பிலான பாதகமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டினைப் பெறுவதற்கான தங்கள் விண்ணப்பங்களை தற்போது பதிவு செய்துகொள்ளலாம்.
If a person suffers a very rare but serious reaction to a vaccine, the government has an obligation to look after them.
TGA எனப்படும் Therapeutic Goods Administration அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளினால் குறிப்பிடத்தக்க பாதகமான எதிர்விளைவுகளை அனுபவிக்கும் நோயாளிகள் அதற்கான இழப்பீட்டினைப் பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. நாட்டில் Pfizer, Moderna மற்றும் AstraZeneca COVID தடுப்பூசிகளுக்கு TGA ஒப்புதல் வழங்கியுள்ளது. COVID-19 Vaccine Claim Scheme ஆனது விரிவான தடுப்பூசித் திட்டத்தின் இன்றியமையாத ஒரு பகுதி என  சிட்னி பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பிலான நிபுணர் பேராசிரியர் ஜூலி லீஸ்க் வரவேற்றுள்ளார். TGA ஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகளுக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறியப்பட்ட பக்கவிளைவுகளான AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் ஃபைசர் தடுப்பூசியுடன் தொடர்புடைய pericarditis ஆகியவையும் இதில் அடங்கும் என்று பேராசிரியர் ஜூலி லீஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.
There must be an accepted link between the vaccine and the side effect.
COVID தடுப்பூசியினால் ஏற்படும் பாதகமான எதிர்விளைவுகளுக்கு அரசின் இழப்பீடு பெறுவதற்கான இத்திட்டம் எவ்வாறு செயற்படுகிறது?

இந்தத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதற்காகப் பதிவு செய்துகொண்டவர்களுக்கு எப்படி மற்றும் எப்போது ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்பதுபற்றிய விவரங்கள் Services Australia வின் claims portal செயல்படத் தொடங்கியவுடன் தெரிவிக்கப்படும். இழப்பீடு பெறுவதற்குத் தேவைப்படும் சான்றுகள் உட்பட இத்  திட்டத்தின் நிர்வாகம் தொடர்பிலான இறுதி விவரங்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில், Services Australia வின் claims portal செயல்படத்தொடங்குவதற்கு முன்னர் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு இழப்பீடு பெறலாம்? எப்படியான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டிவரும்?

$ 5,000 முதல் $ 20,000 வரையிலான இழப்பீட்டினைப் பெறுவதற்கான கோரிக்கைக்கு, பின்வருவனவற்றை  வழங்கவேண்டும்.

  • TGAயினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினைப் பெற்றதற்கான சான்று
  • உங்களுக்கு ஏற்பட்ட பாதகமான எதிர்விளைவுகளுக்கும் தடுப்பூசிக்குமான தொடர்பினை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆவணங்கள்.
  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம்.
  • உங்களுக்கு ஏற்பட்ட வருமான இழப்பினை நிரூபிக்க ஆதாரங்கள்.
இதேவேளை $ 20,000 மற்றும் அதற்கு மேல் இழப்பீட்டினைப் பெறுவதற்கான கோரிக்கைகள் சுயாதீன நிபுணர்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும். இருப்பினும், இந்த வகையிற்கான தேவைப்படும் சான்றுகள் மற்றும் பிற விடையங்கள் பற்றி இன்னும் ஆராயப்பட்டுவருகிறது.

தடுப்பூசி தொடர்பில் மிக அரிதாக ஏற்படும் மரணங்களுக்கான இழப்பீடுகளும் இத்திட்டத்தில் உள்ளன. ஆனால் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பு இருக்காது.
People will mostly experience adverse side effects after the first dose.
தடுப்பூசி போடப்பட்ட எந்த நபரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, 22 பிப்ரவரி 2021 இற்குப் பின்னர் தடுப்பூசி பெற்ற அனைவரும் இத்திட்டத்துக்குத் தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவிட் -19 தொடர்பிலான அவசர காலத்திற்குப் பின்னரான இரண்டு ஆண்டுகளுக்கு இத்திட்டம் நீடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி தொடர்பிலான அரிதான தீவிர பாதகமான நிகழ்வுகள் பெரும்பாலும் தடுப்பூசி பெற்ற சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள் நடந்துவிடுமெனத் தெரியவந்துள்ளதாகப் பேராசிரியர் லீஸ்க் தெரிவித்துள்ளார்.
In a sense, it’s the community looking after the community.
தடுப்பூசிகளை நிர்வகிப்பதில் தங்கள் பங்கை வகிக்கும் சுகாதாரப்பணியாளர்கள் தேவையற்று நீதிமன்றங்களின் முன் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்க இத்திட்டம் உறுதிசெய்யும் என Australian Medical Association தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவது தொடர்பில் உறுதியாக உள்ள வணிகங்கள் இப்போது இழப்பீட்டு ஏற்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல் பணியிடங்களை தடுப்பூசி மையங்களாக மாற்றுவதற்கு இத்திட்டம் உதவும் என Australian Chamber of Commerce தெரிவித்துள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
COVID தடுப்பூசியினால் ஏற்படும் பாதகமான எதிர்விளைவுகளுக்கு அரசு இழப்பீடு | SBS Tamil