ஆஸ்திரேலியாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் திறன்பற்றாக்குறையை சமாளிப்பதற்கென Albanese அரசு இலவச TAFE கற்கைநெறித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை நாமறிந்த செய்தி. எதிர்பார்த்ததை விட அதிகமான மாணவர்கள் இந்த இலவச கற்கைநெறிகளில் இணைந்துகொள்ள பதிவுசெய்துள்ளதாக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அரசின் இத்திட்டம் தொடர்பிலும் இத்திட்டத்தினூடாக என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதுதொடர்பிலும் விளக்குகிறார் கல்வித் துறையில் பல வருட அனுபவம் உள்ளவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்தி வருபவருமான திருமதி சுபி நந்திவர்மன்.அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in