"ஷூ இல்லை; TV இல்லை; சொந்த வீடில்லை". எப்படி தடைகளைக் கடந்தேன்? - கிரிக்கெட் வீரர் நடராஜன்

Source: Getty Images
தமிழக கிராமம் ஒன்றிலிருந்து கிளம்பி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வு. அப்படியான சாதனையாளர் தமிழ்நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் த. நடராஜன் அவர்கள். அவரின் பின்னணிக் கதை சோகமும் வலியும் கலந்தவை. கிரிக்கெட் ஆடுவதற்கு காலணி வாங்கும் பொருளாதார வலிமைகூட இல்லாத நடராஜன் எப்படி உச்சம் தொட்டார்? SBS தமிழுக்காக நடராஜன் அவர்களோடு கலந்துரையாடியவர் - ஜனனி கார்த்திக் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share