ஹெலன்ஸ்பேர்க் ஆலய பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று என்ன நடந்தது?
SVT Source: SVT
சிட்னி புறநகர் ஹெலன்ஸ் பேர்க்கில் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்ன, இந்த விமர்சனங்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன, என்று நாம் நிகழ்ச்சி படைத்திருந்தோம். அந்த நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய நிர்வாகக் குழுவின் வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் நேயர்களுக்கு தொடர்ந்து எடுத்து வருவோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று (2 ஏப்ரல் 2017) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை இந்த ஆலயத்தின் முன்னாள் தலைவர் Dr A Bala நம்மிடம் விளக்கினார். ஆலயக்குழு சார்பில் அவர்களின் கருத்தை அரிய பலமுறை முயற்சித்தோம். அவர்களின் கருத்துக்கள் நமக்குக் கிடைத்ததும் அதை நேயர்களுக்கு எடுத்துவருவோம். Dr A Bala அவர்களோடு உரையாடியவர் றைசெல்.
Share



