ஆஸ்திரேலியாவில், மருத்துவ அவசரநிலையின்போது ஆம்புலன்ஸை வரவழைப்பதற்கான விரைவான வழி 000 எண்ணை அழைப்பதாகும்.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், யாராவது திடீரென்று சுயநினைவை இழந்திருந்தால் அல்லது வலிப்பு ஏற்பட்டால், பெரிய உயரத்தில் இருந்து விழுந்தால் அல்லது உங்களை நீங்களே காயப்படுத்திக் கொண்டால், அல்லது நீங்கள் குத்தப்பட்டிருந்தால் இப்படியானவை உள்ளிட்ட அவசர நிலைமைகளில் நீங்கள் கட்டாயம் ஆம்புலன்ஸை வரவழைக்கவேண்டும் என்று கூறுகிறார் Australian Paramedical College கல்வி இயக்குநராக Registered Paramedic Dr Simon Sawyer

சில சூழ்நிலைகளில் நோயாளியின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம் என்பதால் நீங்கள் 000வை அழைக்கும்போது முடிந்தவரை தெளிவான தகவலை வழங்குவது முக்கியம்.
000வுக்கான அழைப்புகள் இலவசமாக 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் எந்த landline, pay phone அல்லது mobile phoneலிருந்தும் மேற்கொள்ளலாம்.
நீங்கள் 000ஐ அழைக்கும்போது அந்த அழைப்புக்கு பதிலளிக்கும் நபர், உங்கள் நிலைமை உண்மையிலேயே அவசரமானதா என்பதைத் தீர்மானிக்க சில கேள்விகளைக் கேட்பார்.
அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பது முக்கியமானது.

நோயாளிகளின் வயது மற்றும் பாலினம் பற்றிய தகவலும் முக்கியமானது, ஏனெனில் இது சரியான மருந்து மற்றும் தேவையான உபகரணங்களை தயார் செய்ய paramedicsக்கு உதவுகிறது.
ஆனால் 000விற்கான அனைத்து அழைப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதில்லை எனவும் ஆஸ்திரேலியாவில் ஐந்தில் ஒரு அழைப்புக்கு அவசர ஆம்புலன்ஸ் தேவைப்படுவதில்லை எனவும் கூறுகிறார் ஆம்புலன்ஸ் விக்டோரியாவில் Operational Communications இடைக்கால நிர்வாக இயக்குநராக உள்ள Lindsay Mackay
இதேவேளை உங்களுக்கு அவசர ஆம்புலன்ஸ் தேவை என்பது உறுதிசெய்யப்பட்டு ஆம்புலன்ஸல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டால் அதில் வரும் paramedics ஒவ்வாமை உட்பட உங்களின் கடந்தகால மருத்துவ நிலைமைகள் பற்றி ஆராய்ந்து முதற்கட்ட நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வார்கள்.

வழக்கமாக, ஒரு ஆம்புலன்ஸ் உங்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும், ஆனால் உங்களது நிலைமைக்கேற்ப வேறுபட்ட சோதனை வசதிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், அருகில் உள்ள மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.
மருத்துவமனைக் காப்பீட்டுடனான தனியார் மருத்துவக் காப்பீடுகளைக் கொண்டவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாம்.
இதேவேளை ஆம்புலன்ஸ் சேவைகளின் செலவை medicare பொறுப்பேற்காது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், ஆம்புலன்ஸ் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடமிருந்து ஒரு call-out கட்டணம், அல்லது கிலோமீட்டர்களின் அடிப்படையிலான கட்டணம் அல்லது இரண்டும் வசூலிக்கப்படலாம்.
நீங்கள் ஆம்புலன்ஸ் மூலமாக, தரைவழியாகவோ அல்லது ஹெலிகாப்டர் மூலமாகவோ கொண்டு செல்லப்பட்டிருந்தால், நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களிடம் ஆம்புலன்ஸ் cover இருந்தால் அதை பயன்படுத்தலாம்; எனவும் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள ஒவ்வொரு ஆம்புலன்ஸ் coverரும் வித்தியாசமானது எனவும் சொல்கிறார் ஆம்புலன்ஸ் விக்டோரியாவில் Operational Communications இடைக்கால நிர்வாக இயக்குநராக உள்ள Lindsay Mackay.

ஆம்புலன்ஸை அழைப்பதற்கான கட்டணங்கள் நீங்கள் வசிக்கும் மாநிலம் அல்லது பிராந்தியம் மற்றும் நோயாளியின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும்.
குறிப்பாக குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா போன்ற சில மாநிலங்களில் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச ஆம்புலன்ஸ் cover உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நீங்கள் membership-அங்கத்துவ பணம் செலுத்த வேண்டும்.
ஆனால் உங்களிடம் membership இல்லையென்றால்கூட நீங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தலாம் என்றபோதிலும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, யாருக்கு membership தேவை, யாருக்கு தேவையில்லை என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் நிறைய உள்ளன.
சில மாநிலங்களில் உங்களிடம் healthcare card அல்லது senior card இருந்தால் உங்களுக்கு membership தேவைப்படாது.
அதேபோன்று உங்களிடம் தனியார் மருத்துவக்காப்பீடு இருந்தால், சில சமயங்களில் ஆம்புலன்ஸ் coverரும் அதில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

நீங்கள் வாழும் மாநிலம் அல்லது பிராந்தியத்திலுள்ள ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்புகொண்டு அல்லது அவர்களின் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு membership தேவையா என்பதை அறிந்துகொள்ளலாம்.
ஆம்புலன்ஸ் membership விலை உயர்ந்தவை அல்லவெனவும் பொதுவாக ஒரு நபருக்கு ஆண்டுக்கு 50 டொலர்கள் அல்லது ஒரு குடும்பத்திற்கு சுமார் 100 டொலர்கள் எனவும் கூறுகிறார் Australian Paramedical College கல்வி இயக்குநராக Registered Paramedic Dr Simon Sawyer.
இதேவேளை உங்கள் மாநிலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் membership கட்டணங்களைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளுக்குச் செல்லுங்கள்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




