ஆஸ்திரேலிய கடற்கரைகளைப் பற்றி நினைக்கும் போது, சுறாக்களின் தாக்குதல் அடிக்கடி நினைவுக்கு வரலாம்.
சுழி ஆஸ்திரேலிய கடற்கரைகளில் மிகப்பெரிய மற்றும் மிகவும் பொதுவான ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கடற்கரை அபாயங்களுக்கு எதிராக எங்கு, எப்போது நீந்த வேண்டும் என்பதை அறிவதே சிறந்த பாதுகாப்பு.
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 12,000 கடற்கரைகள் உள்ளன. இதில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவற்றில் மட்டுமே lifegaurds அல்லது surf life savers ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கடலோர நீரில் மூழ்கி 141 பேர் இறந்தனர், அவற்றில் சுமார் 36 பேர் சுழியில் சிக்கி இறந்துள்ளனர்.Shane Daw, General Manager of Coastal Safety at SLSA.

சராசரியாக ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒரு அபாயகரமான தாக்குதல் மட்டுமே பதிவாகும், அதே காலகட்டத்தில் சராசரியாக 122 கடலோர நீரில் மூழ்கி இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சுழியினால் ஏற்படுகின்றன.
Shane Daw - SLSA என்று அழைக்கப்படும் Coastal Safety at Surf Life Saving Australiaவில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
SLSA கடந்த ஆண்டு கடல் நீரில் மாட்டிக்கொண்ட 10,000 பேரை மீட்டுள்ளது இதில் பெரும்பாலானவை சுழியில் மாட்டிக்கொண்டவர்கள் என்று Shane Daw கூறுகிறார்.
நமது கடற்கரைகளில் உள்ள பெரிய ஆபத்து சுழி. கடந்த ஆண்டு 141 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் இதில் 36 பேர் சுழியில் மாட்டி இறந்தவர்கள் என்று மேலும் கூறுகிறார் Shane Daw
சுழி என்றால் என்ன?
சுழி என்பது அலைகளுக்கு எதிர் திசையில் நகரும் நீரின் சக்திவாய்ந்த கால்வாய்கள், அவை உங்களை கடற்கரையிலிருந்து கடலுக்குள் இழுத்து செல்லும். மேலும் அதனை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறும் Shane Daw சுழி மிகவும் ஆபத்தானது மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கூறுகிறார் .
நீங்கள் தற்செயலாக சுழியில் மாட்டிக்கொண்டால் SLSA பின்வரும் அறிவுரைகளை வழங்குகிறது:
- அமைதியாக இருக்கவும் மேலும் உங்கள் ஆற்றலைச் சேமிக்கவும்.
- உங்கள் கையை உயர்த்தி உதவிக்கு அழைக்கவும்.
- சுழியுடன் மிதந்தாள் இது உங்களை ஒரு ஆழமற்ற மணல் கரைக்கு கொண் டு செல்லலாம்
- சுழியிலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு இணையாக அல்லது அடங்கும் அலைகளை நோக்கி நீந்தவும்
சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளுக்கு இடையில் நீந்தவும்
சுழியில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பானது.
அதற்கு கடலில் நீந்துவதற்கு பாதுகாப்பான இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிகப்பு மஞ்சள் கொடிகளுக்கிடையே நீந்தவும். கடந்த ஆண்டு கடல் நீரில் மூழ்கி இறந்தவர்களில் 76 சதவீதமானவர்கள் இந்த சிகப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ள பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆபத்தில் மாட்டி உயிரிழந்துள்ளனர். ஆகவே எப்போதும் பாதுகாப்பான இடத்தில் நீந்துவது நல்லது என்று Shane Daw அறிவுரை கூறுகிறார்.

எப்போதும் ஒரு நண்பருடன் கடலில் நீந்தவும்.
SLSA இணையதளத்தில் lifesavers ரோந்து செல்லும் கடற்கரைகளை நீங்கள் கண்டறியலாம். இங்கே நீங்கள் 100 மொழிகளில் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைக் காணலாம்.
நமது கடற்கரைகளில் சுறா மீன்கள் ஒரு உண்மையான அச்சுறுத்தலா?
கடலோர நீரில் மூழ்குவதைப் போலல்லாமல், சுறா மீன்களின் தாக்குதல்கள் அசாதாரணமானவை மற்றும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எனக் கூறப்படுகிறது.
Dr Phoebe Meagher Taronga Conservation Society - இன் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஆவார்.
1800 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சுறா மீன்களின் தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ள ஆஸ்திரேலிய சுறா சம்பவ தரவுத்தளத்தை அவர் நிர்வகிக்கிறார்.

சுறாமீன்களுக்கு பிடித்தமான உணவு மனிதர்கள் அல்ல மற்றும் சந்தர்ப்பவசத்தால் கடிக்கின்றன.Dr Phoebe Meagher, Wildlife Conservation Officer at Taronga Conservation Society
உலகிலேயே அதிக சுறா மீன் தாக்குதல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில அமெரிக்கா உள்ளது .
ஆஸ்திரேலியாவில் 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டிற்கு இடையில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது சுறா தாக்குதல்கள் நடைபெற்றிருந்த நிலையில் அது 2010 முதல் 2020 வரையான ஆண்டுகளில் 22 தாக்குதல்களாக உயர்ந்துள்ளது. ஆனால் அந்த ஆண்டுகளில் சுறா தாக்குதலில் சராசரியாக ஒரு மரணம் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று Dr Phoebe Meagher கூறுகிறார்.
சுறாமீன் ஒன்று மனிதனை கடிக்க நேர்ந்தால் அது அதிக நேரம் நீடிக்காது விரைவாக விலகிவிடும் என்பதை தரவுகளிலிருந்து காணக்கூடியதாக இருப்பதாக கூறும் Dr Phoebe Meagher மனிதர்கள் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் அதனால் தான் அந்த சுறாமீன் தாக்குதலும் இடம்பெறுகிறது மேலும் சுறாவின் பார்வையில் அது மனிதனா அல்லது நீர்நாயா அல்லது ஆமையா என்பது முக்கியமில்லை என்கிறார்.

சுறா இனங்கள் நம்மை எப்போதாவது கடிக்கின்றன. குறிப்பாக தூண்டப்பட்டால். நீங்கள் தற்செயலாக ஒரு carpet சுறா அல்லது கடற்பரப்பில் கிடக்கும் 'wobbegong' போன்றவற்றை மிதிக்க நேரிட்டால் அது தாக்கும் ஆனால் இந்த சுறாக்கள் ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாதவை என்று Marcel Green கூறுகிறார்.
கடலில் பாதுகாப்பாக நீந்துவதற்கு உதவ நாட்டில் பல வளங்கள் உள்ளன. அதில் ஒன்று SharkSmart செயலி. இந்த செயலி நீங்கள் நீந்தும் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் சுறா மீன்கள் குறித்த எச்சரிக்கை மேலும் life savers ரோந்தில் இருக்கும் கடற்கரை இடங்கள் தெரிவிக்கும்.

சில கடற்கரைகளில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வான்வழி சுறா மீன்களை கண்காணிக்கும், சுறா மீன் எதுவும் கண்டால் உடனே அக்கடற்கரை பகுதியில் உள்ள சைரனை இயக்கி பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எப்போதும் பாதுகாப்பான இடத்தில் தனியே நீந்தாமல் நண்பர்களுடன் இணைந்து நீந்தும்படி அறிவுறுத்துகிறார் Shane Daw.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




