ஒருவர் தான் இழந்துவிட்ட ஓய்வூதிய சேமிப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
மேலும், நீங்கள் வெளிநாட்டிற்குச் சென்றாலோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ உங்களின் ஓய்வூதிய நிதிக்கு என்னவாகும்?
Superannuation, அல்லது 'Super' என்பது, நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் போது நீங்கள் வாழ்வதற்காக உங்களின் பணி வாழ்க்கையில் உங்கள் முதலாளி ஒதுக்கிய பணமாகும்.
உங்கள் முதலாளி உங்கள் வருமானத்தில் ஒரு சதவீதத்தை உங்கள் ஓய்வூதிய கணக்கில் செலுத்துவது கட்டாயமாகும், மேலும் நீங்கள் ஓய்வுபெறும் வரை உங்கள் super fund உங்களின் ஓய்வூதிய பணத்தை முதலீடு செய்யும்.
ஆஸ்திரேலியாவில், ஒரு super fund கணக்கு செயலிழந்திருந்தாலும், தனிநபர்கள் தங்களுடைய ஓய்வுக்கால சேமிப்பை இழக்காமல் திரும்ப பெறுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் உள்ளன.
உங்கள் தொடர்பு விவரங்கள் மாறியிருந்தால் மற்றும் super fund நிறுவனத்தால் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் கோரப்படாத ஓய்வூதிய நிதியை ஆஸ்திரேலிய வரி அலுவலகத்திற்கு (ATO) மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய வரி அலுவலகம் ATO - இன் துணை ஆணையர் Emma Rosenzweig.

ATO உரிமைகோரப்படாத சூப்பர் நிதியை பெற்றவுடன், பணத்தை அதன் உரிமையாளரிடம் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கிறது.
சூப்பரை இழந்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், ATO - இன் ஆன்லைன் சேவைகள் மூலம் அதைத் தேடுவது சிறந்தது.
உங்கள் தொடர்பு விவரங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதும் அவசியம்.
Xavier O’Halloran Super Consumers Australia - இன் இயக்குநராக உள்ளார்.
பல Superannuation கணக்குகளை வைத்திருப்பது என்பது பொதுவானது என்றாலும் அவற்றை ஒன்றாக ஒருங்கிணைப்பது நன்மை பயக்கும் என்று Xavier O’Halloran கூறுகிறார்.
ஒவ்வொரு superannuation கணக்கிற்கும் insurance காப்பீடு செலுத்தப்படும் மேலும் கட்டணம் அறவிடப்படும். ஆகவே பல கணக்குகள் இருப்பதினால் சுமார் $50,000 வரை ஓய்வூதிய நிதியிலிருந்து இழக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார்.

தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் இங்கு பணிபுரிந்து superannuation வைத்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியவுடன் அந்த சூப்பர் நிதியை எடுத்துக்கொள்ள முடியும்.
நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே Departing Australia Superannuation Payment (DASP)க்கான விண்ணப்பத்தைத் தொடங்கலாம். ஆனால் உங்கள் வீசா காலாவதியாகும் வரை அல்லது ரத்து செய்யப்படும் வரை அதை உங்களால் முடிக்க முடியாது.
நாட்டை விட்டு வெளியேறிய பின் ஆறு மாதங்களில் ஓய்வூதிய பணத்தை கோரவில்லை என்றால் அந்த பணம் ஆஸ்திரேலிய வரி அலுவலகத்திற்கு super fund நிறுவனத்தால் மாற்றப்படும். ATO - இல் உள்ள உங்களின் super நிதியை நாட்டைவிட்டு வெளியேறிய பின் நீங்கள் கோரமுடியும் என்று கூறுகிறார் Ms Rosenzweig

நீங்கள் நிரந்தர வதிவிட உரிமை வீசாவில் இருந்தாலோ அல்லது ஆஸ்திரேலியா குடியுரிமையுடைவராக இருந்தால் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும் superannuation சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
ஓய்வூதிய பணத்தை எடுக்கும் வயதை எட்டியபின் நிதியை எடுக்கமுடியும் அல்லது கடுமையான நிதி நெருக்கடி அல்லது Medicare கொண்டு செய்துக்கொள்ள முடியாத முக்கியமான மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வூதிய நிதியை எடுக்கமுடியும்.
உங்களின் மரணத்திற்கு பிறகு உங்களின் ஓய்வூதிய நிதியின் பயனாளர் யார் என்பதை குறிபிட்டுவைத்திருப்பது சிறந்த நடைமுறையாகும். உங்கள் குடும்ப சூழ்நிலைகள் மாறினால், உங்கள் பயனாளிகளின் பட்டியலையும், எந்த சதவீதத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதையும் சரிசெய்யலாம்.
ஒருவர் இறந்த பின் அவரின் ஓய்வூதிய நிதி விநியோகம் தொடர்பான புகார்கள் நியமிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான Australian Financial Complaints Authority ஆஸ்திரேலிய நிதி புகார்கள் ஆணையத்தால் (AFCA) கையாளப்படுகின்றன.
இறந்த பின் உங்களின் சொத்துக்களின் பயனாளர்கள் யார் என்பதை உயில் ஒன்றில் எழுதி வைப்பது போல உங்களின் ஓய்வூதிய நிதியின் பயனாளர் யார் என்பதையும் திட்டமிட்டு பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் Australian Financial Complaints Authority (AFCA) - இன் Heather Gray

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




