Key Points
- Phishing, skimming, social engineering, hacking, மற்றும் dumpster diving ஆகியவை தரவுகளைத் திருடுவதற்கான முறைகள்.
- அடையாள திருட்டு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அல்லது இரண்டின் கலவையாகவும் நடக்கலாம்.
- நீங்கள் அடையாளத்திருட்டுக்கு ஆளாகியிருப்பதாக நம்பினால், உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும்.
ஆஸ்திரேலியாவில் identity theft-அடையாளத் திருட்டு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் அடையாளத் திருட்டுக்குப் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடையாளத் திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிதி இழப்புகள், credit scoresக்கு பாதிப்பு, மற்றும் சட்டரீதியான மாற்றங்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
ஆனால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் குறைக்க நீங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு மோசடி நோக்கங்களுக்காகவும் நிதி ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதே அடையாள திருட்டு என்று விளக்குகிறார்
சிட்னி பல்கலைக்கழகத்தின் School of Computer Scienceஇல் பாதுகாப்பு தொடர்பான மூத்த விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி சுரங்க செனவிரத்ன.
மோசடிகளை இனங்காண்;பது, தவிர்ப்பது மற்றும் புகாரளிப்பது குறித்து பொதுமக்களுக்கு கற்பிப்பதற்காக, Australian Competition and Consumer Commission (ACCC)ஆல் நடத்தப்படும் Scamwatch வலைத்தளத்தின் தரவுகளின்படி, ஆஸ்திரேலியர்கள் 2022 இல் 568 மில்லியன் டொலர்களை மோசடிகளில் இழந்திருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டில் பதிவாகிய இழப்புகளிலிருந்து கிட்டத்தட்ட 80வீத அதிகரிப்பைக் குறிக்கிறது. மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளிடம் இழப்புகளைப் புகாரளிப்பதில்லை என்பதால் இந்த புள்ளிவிவரங்கள் கணிசமாகக் குறைத்து மதிப்பிடப்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சைபர் குற்றவாளிகள் என்ன வகையான தகவல்களைத் திருடுகிறார்கள்?
ஒரு சைபர் குற்றவாளி, பின்வருவன உட்பட உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம்:
- பெயர்.
- பிறந்த தேதி.
- ஓட்டுநர் உரிம எண்.
- முகவரி.
- தாயின் முதல் பெயர்.
- பிறந்த இடம்.
- கடன் அட்டை விவரங்கள்.
- வரி கோப்பு எண்.
- மருத்துவ அட்டை விவரங்கள்.
- பாஸ்போர்ட் தகவல்.
- தனிப்பட்ட அடையாள எண் (PIN).
- ஆன்லைன் கணக்கு பயனர் பெயர் மற்றும் உள்நுழைவு விவரங்கள்.
அடையாள திருட்டு ஏற்பட பல வழிகள் உள்ளன. Phishing, skimming, social engineering, hacking மற்றும் dumpster diving ஆகியவை தரவுகளைத் திருடுவதற்கான சில முறைகளாகும். அடையாள திருட்டு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அல்லது இரண்டின் கலவையாகவும் இடம்பெறலாம்.
குறைந்த மதிப்புள்ள தகவல்கள் கூட மோசடி செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ACCC துணைத் தலைவர் DrCatriona Lowe கூறுகிறார்.
மோசடி செய்பவர்கள் பொது ஆதாரங்களில் இருந்து உங்களைப் பற்றி மேலும் அறியலாம்.
உங்கள் குடும்பத்தைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டிருக்கும் சமூக ஊடக கணக்குகளும் இதில் அடங்கும் என்று DrCatriona Lowe எச்சரிக்கிறார்.
சைபர் குற்றவாளிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றவுடன் அவர்களால் என்ன செய்ய முடியும்?
மோசடிக்காரர்கள் தொகுத்த தனிப்பட்ட தகவல்களின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து இது இருக்கும் என்று DrCatriona Lowe கூறுகிறார்.
உதாரணமாக அவர்கள் பின்வருவன உட்பட பிற சேவைகளை உங்கள் பெயரில் பெறலாம் என அவர் விளக்குகிறார்.
- உங்கள் பெயரில் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
- உங்கள் பெயரில் ஒரு வங்கி அல்லது building society கணக்கை திறக்கலாம்
- உங்கள் பெயரில் பிற நிதி சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- உங்கள் பெயரில் கடன்களை பெறலாம்
- உங்கள் பெயரில் ஏதேனும் பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம் (உதாரணமாக housing benefit, new tax credits, income support, job seeker's allowance, child benefit)
- உங்கள் பெயரில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
- உங்கள் பெயரில் ஒரு வாகனத்தை பதிவு செய்யலாம்
- உங்கள் பெயரில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
- உங்கள் பெயரில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
- உங்கள் பெயரில் மொபைல் போன் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
ஆன்லைன் ஸ்டோர்கள் உட்பட, அறிமுகமில்லாத இணையதளத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதற்கு முன் இருமுறை யோசிக்குமாறு DrCatriona Lowe பரிந்துரைக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம் எனவும் அந்த மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
அதேநேரம் மோசடிக்காரர்கள் தொலைபேசி வழியாகவும் உங்களை அணுகலாம் என்பதால் உங்கள் தனிப்பட்ட தகவலைக் கேட்கும் தொலைபேசி அழைப்புகளில் கவனமாக இருக்குமாறு பரிந்துரைக்கிறார் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தேசிய அடையாள மற்றும் இணைய ஆதரவு சேவையின் Community Outreach மேலாளராக உள்ள Sarah Cavanagh.

வீட்டினுள்ளும் நீங்கள் வெளியே செல்லும்போதும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்களை கவனமாகப் பாதுகாக்குமாறு Sarah Cavanagh பரிந்துரைக்கிறார். உங்கள் அஞ்சல் பெட்டியைப் பூட்டிவைப்பதுடன், உங்களது தனிப்பட்ட தகவலைக் கொண்டுள்ள தேவையில்லாத ஆவணங்களை அழிக்குமாறும் அவர் வலியுறுத்துகிறார்.
அதேநேரம் ஒவ்வொரு ஆன்லைன் கணக்கிற்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை வைத்திருப்பதும் முக்கியம்.
ஆனால் உங்கள் அடையாளம் திருடப்பட்டதா என்பதை எப்படிச் சொல்ல முடியும்?
பெரும்பாலான அடையாள திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தெரியாது.
விழிப்புடன் இருப்பதும், உங்கள் அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான அறிகுறிகளைக் கவனிப்பதும் முக்கியம் என்று Sarah Cavanagh கூறுகிறார்.
உதாரணமாக நீங்கள் எதிர்பார்க்கும் முகவரிக்கு அஞ்சல் வருவது நின்றுவிடல், உங்களது வங்கி அல்லது கிரெடிட் கார்டு அறிக்கைகளில் நீங்கள் அங்கீகரிக்காத பணப்பரிவர்த்தனைகள் காணப்படல் உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உங்கள் அடையாளம் திருடப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால் IDcare ஐத் தொடர்புகொள்ளுமாறு Sarah Cavanagh பரிந்துரைக்கிறார். என்ன செய்ய வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிகாட்டியை ஒரு ஆலோசகர் உங்களுக்கு வழங்குவார்.
மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உடனடியாகத் தொடர்புகொள்வதும், உங்கள் ஆன்லைன் கணக்கு விவரங்களைச் சரிபார்ப்பதும் முக்கியம்.

நீங்கள் அடையாளத்திருட்டுக்கு ஆளாகியிருப்பதாக நம்பினால், உங்கள் consumer credit report ஐத் தடை செய்யுமாறு கடன் அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு ஒரு கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
இதன்மூலம் கடன் வழங்குநர்கள் உங்கள் credit reportஐ சரிபார்க்கவோ அல்லது அணுகுவதையோ தடுக்கமுடியுமென சிட்னி பல்கலைக்கழகத்தின் நிதித்துறையின் மூத்த விரிவுரையாளரான Andrew Grant விளக்குகிறார்.
பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் அடையாள திருட்டு யாருக்கும் ஏற்படலாம்.
வெளிநாட்டில் இருந்தபோது தானும் இந்த அடையாள திருட்டுக்கு பலியானதாக Dr Andrew Grant கூறுகிறார்.
மோசடி செய்பவர்கள் அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவதால் stop, think, protect என்ற மூன்று முக்கிய வார்த்தைகளை நினைவில் வைத்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு ACCC துணைத் தலைவர் DrCatriona Lowe கேட்டுக்கொள்கிறார்.
மேலும் தகவல்கள்
- ஒரு மோசடி தொடர்பில் SCAMWatch online form ஐ நிரப்புவதன் மூலமோ, ReportCyber மூலமோ புகாரளிக்கலாம்.
- அடையாள திருட்டு பற்றி கவலைப்பட்டால், 1800 595 160 (Aus) அல்லது 0800 121 068 (NZ)ஆகிய எண்களில் IDCAREஐ தொடர்பு கொள்ளவும்.
- அடையாளத் திருட்டின் புதிய முறைகள் மற்றும் வளர்ந்து வரும் மோசடிகள் பற்றிய தகவல்களை Scamwatchஇல் காணலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




