"ஆண்டாளை அவமதித்ததால் ஆகாரம் இல்லை"

Source: Supplied
நாட்டுப்புறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர், மற்றும் பேராசிரியர் திருமதி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்த வருடம் பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழர்களில் பேராசிரியர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனும் ஒருவர். திருமதி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மட்டுமல்ல, அவரது துணைவர் முனைவர் நவநீதகிருஷ்ணனும் மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரையும் தொலைபேசி வழியாக சந்தித்து, பத்ம ஸ்ரீ விருது குறித்தும், கவிஞர் வைரமுத்துவின் "தமிழை ஆண்டாள் கவிதை" குறித்த சர்ச்சை குறித்தும் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார். பேராசிரியர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், மற்றும் அவரது துணைவர் முனைவர் நவநீதகிருஷ்ணன் இருவருடனான நேர்காணலின் நிறைவுப் பாகத்தை எதிர்வரும் நிகழ்ச்சி ஒன்றில் நேயர்கள் எதிர்பார்க்கலாம்.
Share


