தன்னை ஒரு திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தி, சாதி அமைப்பின் அப்பட்டமான யதார்த்தங்களை அழகாக எழுத்தில் வடிக்கும் ஒரு முக்கிய நாவலாசிரியர் ‘இமயம்’ அவர்கள் எழுதிய “செல்லாத பணம்” நாவலுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பாடசாலை ஆசிரியரான ‘இமயம்’ தனது முதல் நாவலான கோவேறு கழுதைகள் வெளியிட்டதிலிருந்து கடந்த 28 ஆண்டுகளில் ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு நெடுங்கதையும் எழுதியுள்ளார்.
தனது எழுத்துப் பணி குறித்தும் அவரது எழுத்து நடை பற்றியும் ‘இமயம்’ அவர்கள் (உண்மையான பெயர் வி. அண்ணாமலை) குலசேகரம் சஞ்சயனுடன் மனம் விட்டுப் பேசுகிறார்.
Share




