முன்னோர்களின் வழிகாட்டுதலால் உருவான அவர்களின் விளையாட்டு சாதனைகள், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த நாட்டில் அழியாத தடத்தை விட்டுச் செல்கின்றன.
விளையாட்டின் சக்தியின் மூலம், பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்கள் தேசிய ஆன்மாவின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டனர்.
ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு தொழில்முறை விளையாட்டின் உச்சியை அடைவதற்கு, பல ஆண்டுகள் பயிற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது.
கால்பந்து வீராங்கனை Lydia Williams மற்றும் முன்னாள் ஒலிம்பிக் தடை தாண்டும் வீரர் Kyle Vander-Kuyp போன்ற பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்களுக்கு, இதற்கு முன்பு விளையாடியவர்களின் சாதனைகள்தான் சர்வதேச அரங்கில் வெற்றி பெறும் தைரியத்தை ஊட்டியது.
Lydia Williams மேற்கு ஆஸ்திரேலியாவின் தென் மேற்குப் பகுதியில் பிறந்த ஒரு Noongar பெண்.

SYDNEY, AUSTRALIA - JUNE 03: Lydia Williams, goalkeeper of Australia is presented with a gift from Evonne Goolagong Cawley before the international friendly match between Australia Matildas and China PR at Accor Stadium on June 03, 2024 in Sydney, Australia. (Photo by Matt King/Getty Images) Credit: Matt King/Getty Images
அவருடைய போட்டி விளையாட்டு பயணம் மேற்குத் ஆஸ்திரேலியாவின் Kalgoorlie என்ற நகரில் சிறுமியாக இருந்தபோதே தொடங்கியது.
Lydiaவின் விளையாட்டு வாழ்க்கை அவரை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு ஒலிம்பிக்குகள், ஐந்து உலகக் கோப்பைகள், ஆறு ஆசியக் கோப்பைகள் என அவர் சென்ற இடமெல்லாம் புதிய தடைகளை உடைத்தவராக இருந்தார்.
Kyle Vander-Kuyp இரண்டு ஒலிம்பிக், பல காமன்வெல்த் விளையாட்டுகள் மற்றும் ஏராளமான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தடை தாண்டும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Kyle Vander-Kuyp is competing in the hurdles at the Sydney 2000 Olympics.
விளையாட்டுடனான அறிமுகம் Kyleக்கு சுய வெளிப்பாட்டுக்கான வழிமுறையையும், சமூக இணைப்பு உணர்வையும் வழங்கியது.
தன் அடையாளத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்த Kyle பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தால் உந்தப்பட்டு சிறிய தடகள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்பு ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதையை சென்றடைந்தார்.
Kyleலின் விளையாட்டுப் பயணம், ஒரு பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மனிதனாக தன்னை சுயமாக உணரவைத்ததாகவும் இதற்கு ஏனைய பூர்வீகக்குடி பின்னணிகொண்ட வீரர்களின் ஊக்குவிப்பு முக்கிய காரணம் எனவும் அவர் சொல்கிறார்.

Kyle Vander-Kuyp with his adoptive mother Patricia Vander-Kuyp and his birth mother Susan Dawson - Image supplied by Kyle Vander-Kuyp.
Kyle 1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
Lydia Williamsஸைப் பொறுத்தவரை, அவரது நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது விளையாட்டுப் பயணம் அவரது அணியினரால் ஊக்கப்படுத்தப்பட்டது. மேலும் வித்தியாசங்களை ஏற்றுக் கொள்வதில் அணியைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமை பேணினர்.

Kyle Vander-Kuyp near Uluru – Image supplied by Kyle Vander-Kuyp.
தலைமுறைகளை ஊக்குவித்து, கனவுகளை நனவாக்கும் முன்னோடியாக விளங்குகின்ற Lydia மற்றும் Kyle இருவரும் தங்கள் விளையாட்டு பயணங்களின் பரந்த தாக்கத்தை உணர்கிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand