உங்கள் வாழ்வையும் உயர்த்தும் தமிழனின் கண்டுபிடிப்பு
Dr Siddharth Ramachandran
எழுத்துகளையும் நிழற்படங்களையும் மட்டுமே கொண்டிருந்த இணையத்தளங்கள் இப்போது இரு பக்கமும் ஒலி, ஒளி வடிவங்கள் என்பது மட்டுமல்லாது, நாம் இயக்குகின்ற கருவிகளின் எண்ணிக்கையும் அவற்றின் திறனும் அதிகரித்துத் தான் இருக்கின்றன. அது தவிர, கண் இமை மூடித் திறப்பதற்குள், இணையத்தில் சொடுக்கிய திரைப்படமோ, செய்தியோ தெரியவேண்டும் என்பது எம்மில் பலரது எதிர்பார்ப்பு. என்னதான் செய்தாலும் உங்களது கணனியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ இணைய இணைப்பு இன்னும் வேகமாக இருக்கலாமே என்று எதிர்பார்க்கிறீர்களா? இந்த எதிர்பார்ப்புகளை ஈடுகட்டப் பல விஞ்ஞானிகள், பல தொழில்நுட்பங்களைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து, பரிசோதித்து, பாவனைக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவரை இனங்கண்டு அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பற்றி "இது கொஞ்சம் புதுசு" நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகிறார்இ எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share