இலக்கிய உலகில் செங்கையாழியான் என அறியப்படும் கலாநிதி க.குணராசா அவர்கள் மாபெரும் எழுத்தாளுமை. கடந்த வாரம் இலங்கையில் காலமான அவர் படைத்த இலக்கியமளவு இலங்கையில் தமிழில் இதுவரை யாரும் படைக்கவில்லை. இலக்கிய உலகில் ஆழமான அழுத்தமான பதிவுகளைத் தந்தவர் அவர். செங்கையாழியானின் இலக்கிய பதிவுகள் ஒவ்வொன்றும் ஈழ வரலாற்றைப் பதிந்த முயற்சிகள், காலத்தை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடிகள். செங்கையாழியான் அவர்கள் 2008 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பின் நிறைவுப்பகுதி. அவரோடு உரையாடியவர் - றைசெல்.