மறைந்த எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்களின் சிறப்பு நேர்முகம்!

Source: Wikipedia
தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 87. முற்போக்கு எழுத்தாளரான செல்வராஜ் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பனர்களில் ஒருவர். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையையும், அவர்களது விடுதலைக்காக செங்கொடி இயக்கம் ஆற்றிய மகத்தான பணியையும் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவல் “தோல்”. இந்த நாவலுக்காக அவருக்கு 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவ்வேளையில் அவர் நமக்கு வழங்கிய நேர்முகம் இது. செல்வராஜ் அவர்களோடு உரையாடியவர் றைசெல்.
Share