சுகிதா அவர்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை படைத்துள்ளார். பல விருதுகளைக் குவித்துள்ளார். இந்தியாவில் ஊடகத்துறைக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க Laadli Media Awards ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றவர். UNICEF fellowship க்காக பரிந்துரைக்கப்பட்டவர். காட்சி ஊடகம் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். குழந்தைகள் உரிமை, பெண் உரிமை, சுற்றுப்புற சூழல் உரிமை எனும் கருத்தியல் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றவர். இப்படி பல தகைமைகள் கொண்ட பெண்மணி சுகிதாவை சந்திக்கிறோம். உரையாடியவர்: றைசெல். பாகம் – 1
"காதல் திருமணமே என்னை ஊடகத்துறையை தேர்ந்தெடுக்கவைத்தது"- சுகிதா

Source: K.S.Sugitha Sarangaraj
தமிழ்நாட்டில் அரிதாக பெண்கள் நுழையும் ஊடகத்துறையில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது உச்சம் தொட்டிருப்பவர் K.S.சுகிதா சாரங்கராஜ் அவர்கள். தற்போது தமிழ்நாட்டின் முன்னணி செய்தி ஊடகமான NEWS 7 TAMILஇல் இணை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
Share