சம்பந்தனும் சுமந்திரனும் தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டோம் என்பது வலிக்கிறது – கவிஞர் காசி ஆனந்தன்
Kasi Ananadan Source: Kasi Ananadan
தமிழ்நாட்டில் வாழும் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம் அமைப்பின் சார்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) சென்னையை அடுத்த போரூரில் தமிழீழம் தமிழர் தாயகம்எனும் மாநாட்டை நடத்துகிறது. அதில் பாஜகவின் மும்பை சட்டமன்ற உறுப்பினரான தமிழர் இரா.தமிழ்ச்செல்வன் கலந்துகொள்கிறார். மட்டுமல்ல, இந்து மக்கள் கட்சியின் நிகழ்வுகளில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டதையடுத்தும், கவிஞர் காசி ஆனந்தனின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கவிஞர் காசி ஆனந்தன் தனது விளக்கத்தை முன்வைக்கிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share



