“இசையமைப்பாளர்கள் என்னை முழுமையாக பயன்படுத்தத் தவறிவிட்டனர்”- O.S.அருண்

Source: O.S. Arun
கர்நாடக சங்கீதத்தில் மேதையாக வலம் வருகின்றவர் O.S.அருண் அவர்கள். நவீனம், பழமை என்று அவர் இசையில் செய்யும் முயற்சிகள் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்தவை. சிட்னி நகரில் “சமர்பண்” எனும் நிகழ்ச்சிக்காக விரைவில் வருகைதரவிருக்கும் அருண் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார். தனது சங்கீதப் பயணம், கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியது, திரைஇசையமைப்பாளர்கள் தன்னை பயன்படுத்தத் தவறியமை என்று பல்வேறு கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் தருகிறார். கலைமாமணி O. S. அருண் அவர்களுடன் உரையாடியவர்: றைசெல். பாகம்: 2. “சமர்பண்” நிகழ்ச்சி நடைபெறும் நாள்: அக்டோபர் 19 சனிக்கிழமை மாலை 7 மணி இடம்: Sydney Bahai Centre, 107, Derby Street, Silverwater, NSW 2128. அதிக தகவலுக்கு: Mrs Yogam Devendran – 0413 161 053 & Dr A Bala – 9706 7354
Share