கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள், கவிதை, சிறு கதை, நாவல்கள், சின்னஞ் சிறு கதைகள், குட்டிக் கதைகள், உருவகக் கதைகள், வரலாறு, இலக்கணம், குறுங்காவியங்கள் என 90க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 15,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 40 ஊஞ்சல் பாட்டுக்கள் எழுதியுள்ளார். மற்றும் திருவிரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலைகள், தல புராணங்கள், தூதுகள், கண்ணன் கவசம், விடுதலை கீதங்கள் என இவரின் படைப்புகள் தொடர்ந்து செல்கின்றன.
இந்து சாசனம், கலைச் செல்வி பத்திரிகை போன்றவற்றிற்கு உதவி ஆசிரியராகவும், தற்போது கனடாவில் உங்கள் நண்பன் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்து வருகிறார் கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள்.