இலங்கையின் குறிப்பிடத்தக்க ஆளுமை பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு அவர்கள். அவர் தற்போது இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள Suriya Women's Development Centerயில் பணிபுரிகிறார். முன்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சித்ரலேகா 1992 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கற்பித்துள்ளார். பாலினம், தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் அவரது முக்கிய ஆராய்ச்சிகள். பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ள சித்ரலேகா அவர்கள் பெண்கள் தேசியக் குழுவிலும் (2007 - 2010), நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஆலோசனைப் பணிக்குழுவிலும் பணியாற்றியவர். இலங்கையில் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான பணிக்காக அவர் UNHCR ஆல் கௌரவிக்கப்பட்டார். பேராசிரியர்.சித்ரலேகாவுடன் உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம் 2
நேர்முகம் பாகம் 1 ஐ செவிமடுக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்:
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




