பல்கலை வித்தகர் தீபன் கணேஷ், ஒரு பாடகர், இசையமைப்பாளர், நடனக்கலைஞர் மட்டுமன்றி வீணை, புல்லாங்குழல், கஞ்சூரா, மோர்சிங், தபேலா, Keyboard, மற்றும் பல வாத்தியங்களில் கைதேர்ந்தவர். அத்துடன் கட்டடப் பொறியிலாளராகப் பணியாற்றிவரும் தீபன் இலங்கையின் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பாடசாலையின் நிதி சேகரிப்பு கலை நிகழ்வுக்காக ஆஸ்திரேலியா வரவுள்ள தீபன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 'மகாஜன மாலை 2017' எனும் நிகழ்வு சிட்னி நகரில் ஜூன் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு C3 Church Hall, 108 Silverwater Road, Silverwater எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 'பொன்மாலைப் பொழுது 2017' எனும் நிகழ்வு Melbourne நகரில் ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு Moorabbin City Town Hall, Moorabbin, Vic எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.
Share




