“கர்நாடக இசையை புனிதம் என்பது முட்டாள்தனமானது” – T.M.கிருஷ்ணா

Source: SBS Tamil
இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வனது டி.எம்.கிருஷ்ணா அவர்களின் குரல். கர்நாடக சங்கீதக் கலையில் உச்சம் தொடும் டி.எம்.கிருஷ்ணாவின் குரல் சாதியத்துக்கு எதிராக உச்சஸ்தானியில் ஒலிக்கிறது. கர்நாடக சங்கீதத் துறைக்கு உள்ளேயே இருந்துகொண்டு கலகக் குரல் எழுப்புகிறார். அரசியல், சித்தாந்தங்கள், சாதீயம், பிராமணியம் என்று சாட்டையை சுழற்றுகிறார். சமூக செயல்பாடுகளுக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று பார்க்கப்படும் “Ramon Magsaysay” விருது பெற்றவர். தீர்க்கமான சிந்தனைகளுடனும், தெளிவான பார்வையுடனும் நமக்கு சவால்விட்டு டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மனம்திறந்து பேசும் நீண்ட நேர்முகம் இது. பாகம் 2. சந்திப்பு: றைசெல்.
Share