ஆஸ்திரேலியாவின் பலதரப்பட்ட தெற்காசிய சமூகங்கள் ஒரே ஒரு விடயத்தால் ஒன்றுபட்டுள்ளன. கிரிக்கெட் மீதான காதல்தான் அது.
Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.
எட்டு அத்தியாங்களுக்கு மேல், உஸ்மான் கவாஜா, கபில் தேவ், சுனில் கவாஸ்கர், திலகரத்னே தில்ஷன் மற்றும் Lisa Sthalekar போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ள இந்த Podcast தொடரைக் கேட்பதற்குத் தயாராகுங்கள்.
Colours of Cricket என்பது SBS வானொலியின் தெற்காசிய மொழி நிகழ்ச்சிகளின் கூட்டுத் தயாரிப்பாகும். SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.
இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
Colours of Cricket-இன் முதல் அத்தியாயம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.