இஸ்லாமோஃபோபியா பதிவேட்டின் நிர்வாக இயக்குனரான டாக்டர் நோரா அமத், 2023 அக்டோபர் 7 ஆம் தேதியிலான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் திடீர் மற்றும் கவலைக்கிடமான அளவிலான உயர்வு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்கள் என அவர் மேலும் கூறினார்.
இது பாலினத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான சமூகப்பிரச்சனை ஆகும்.
உலக அரசியல் சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை தூண்டக்கூடிய காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டும் ஒரே காரணம் அல்ல என்று கூறும் டாக்டர் அமத் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைத் தூண்டிவிடுவதிலும் அல்லது எதிர்த்துப் போராடுவதிலும் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்று கூறினார்.
SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nic Zoumboulis தயாரித்த விவரணத்தை தமிழிலில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.