NSW மாநிலத்தில் இயங்கும் வணிக நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான கழிவுகளை உருவாக்குகின்றன. இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான கழிவுகள் மீளப் பயன்படுத்தப்படலாம் அல்லது மறு சுழற்சி செய்யப்படலாம். நிலப்பரப்பை நிரப்புவதற்கு அனுப்பப்படும் கழிவுகளைக் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.
நாட்டின் மிகப்பெரிய வணிக மறு சுழற்சித் திட்டம் என்ற பெயரை NSW மாநிலத்தின் Bin Trim என்ற திட்டம் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள, Ethnic Communities’ Council of NSW அமைப்பைச் சேர்ந்த இரு மொழி எரிசக்தி மதிப்பீட்டாளர் மணி இராமசாமியுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
Share




