உள்ளத்தில் கோவில் கட்டுவோம் !!

Dr V Iraianbu
தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும், இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் இலக்கியப் பற்றுடைய இறையன்பு அவர்கள், படைப்பாற்றலில் பன்முக ஆளுமையுடைவர். நவீன இலக்கியத்தில் பெரும்பங்கை வகிக்கக்கூடிய சிறுகதை வரிசையில் அவர் பல நல்ல கதைகளை எழுதி உள்ளார். எழுத்திற்குப் பரிசுகளும் பெற்றுள்ளார்.குலசேகரம் சஞ்சயன் இவரை சந்தித்து உரையாடுகிறார். இது தொடரின் இறுதிப்பாகம்.
Share