இளம் வயதிலேயே குழந்தைப் பராமரிப்பைத் தொடங்குவது, வேலை செய்வதற்கான விருப்பங்கள் மற்றும் பெற்றோருக்குரிய பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதற்கான நடைமுறைத் தீர்வாக இருக்கும். இருப்பினும், இந்த முடிவு சில சவால்களை கொண்டு வரலாம், குறிப்பாக புதிதாக குடியேறியவர்கள் மற்றும் முதல் முறையாக பெற்றோராகியவர்களுக்கு இது சவாலாக இருக்கலாம்.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு சேவையைப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தோருக்கு பெரும்பாலும் குடும்ப ஆதரவு இருப்பதில்லை. மேலும் வேலைக்குப்போகும் போது தங்கள் குழந்தைகளை பராமரிக்க வீட்டில் யாரும் இருப்பதில்லை.
இப்படியான சந்தர்ப்பங்களில் Early childhood education புதிதாக பெற்றோரானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பெற்றோரை பணியிடத்திற்குத் திரும்ப அனுமதிப்பதால் ஆஸ்திரேலியாவில் இது பரிந்துரைக்கப்படுகிறது.
Early childhood education குழந்தைகளை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பள்ளிக்கு தயார்படுத்துகிறது.
அதேநேரம் குழந்தையை day care மையமொன்றில் சேர்ப்பதும் பெற்றோருக்குள்ள மற்றொரு பிரபலமான விருப்பத்தெரிவாகும்.

குழந்தைகள் early childhood மையத்தில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்கும்போது, தொற்றுநோயைச் சுமக்கும் நுண்ணுயிரிகளை எதிர்கொள்வதால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.
குழந்தைகளைப் பொறுத்தவரை வீடு என்பது ஒரு பாதுகாப்பான சூழல் எனவும் ஆனால் early childhood மையத்தில் ஏனைய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலரைச் சந்திப்பதால் சிலவகையான உடல் நலக்குறைவுக்கு குழந்தைகள் ஆளாக நேரிடும் என்கிறார் மெல்பனில் உள்ள early childhood educator Jyoti Sandhu.
குழந்தை பராமரிப்பு மையத்தினூடாக ஏற்படும் பெரும்பாலான நோய்கள் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், சில சந்தர்ப்பங்களில் தீவிரமான தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கலாம் என்று Jyoti Sandhu மேலும் கூறுகிறார்.
வருடத்தின் ஒவ்வொரு காலப்பகுதியையும் பொறுத்து குழந்தைகள் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகலாம் என விளக்குகிறார் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மெல்பனைச் சேர்ந்த Dr Amir Saeedullah.
Dr Amir Saeedullahவின் கூற்றுப்படி, day care மையங்களுக்குச் செல்லும் 100 குழந்தைகளில் 20-30 பேர் இந்த நோய்த்தொற்றுகளை அடிக்கடி சந்திக்கின்றனர்.
இந்த நோய்த்தொற்றுகள் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையின்றி தாமாகவே கட்டுப்படக்கூடியவை என்று Dr Amir Saeedullah கூறுகிறார்.

முதல் முறையாக தாயான நிகிதாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உள்ளது, சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தை day care செல்லத் தொடங்கியதாகவும் இரண்டு தடவைகள் மோசமான flu ஏற்பட்டதாகவும் hand-foot-and-mouth disease ஏற்பட்டதாகவும் நிகிதா சொல்கிறார்.
இதுபோன்ற சூழ்நிலைகள் பல்வேறு சவால்களை ஏற்படுத்தலாம் என்கிறார் நிகிதா.
குறிப்பாக குழந்தைக்கு உடல்நலம் நன்கு சரியாகும்வரை அதனை day care க்கு அனுப்ப முடியாமலிருத்தல் மற்றும் day care மையத்திலிருந்து குழந்தையை அழைத்துச்செல்லுமாறு வரும் அழைப்புகள் போன்றவை பெற்றோரை சிரமத்திற்குள் தள்ளலாம் என நிகிதா சொல்கிறார்.
உதாரணமாக வேலை நாளொன்றின் நடுவில் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட தங்கள் குழந்தையை அழைத்துச் செல்லும்படி பெற்றோர்கள் கேட்கப்படும்போது அவர்களுக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தலாம்.
அதேநேரம் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், முதலாளியிடம் விடுப்பு கேட்பது கடினமாக இருக்கலாம்.
கூடுதலாக, நோய்வாய்ப்பட்ட குழந்தை day care மையத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், குழந்தை பராமரிப்பு கட்டணத்தை தாம் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்கிறார் நிகிதா.
இதேவேளை குழந்தை பாராமரிப்பு மையத்திலிருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளை Dr Saeedullah கோடிட்டுக் காட்டுகிறார்.
அதாவது வெறுமனே மூக்கு ஒழுகினால் அக்குழந்தையை வீட்டிற்கு அனுப்புவது நியாயமானது என்று தான் நினைக்கவில்லை என்றும் காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை நோ போன்ற ஏனைய பல அறிகுறிகளுடன் அக்குழந்தை உடல்நலக்குறைவாகத் தோன்றினால் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதைத் தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறுகிறார்
அதேநேரம் உயர் வெப்பநிலை, வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது தோலில் ஏற்படும் rash உள்ளிட்ட தீவிர அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் மருத்துவ உதவிபெற வேண்டியதன் அவசியத்தை Dr Saeedullah வலியுறுத்துகிறார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தை வீட்டில் இருப்பது அக்குழந்தை விரைவாகக் குணமடைய உதவும் என்கிறார் early childhood educator Jyoti Sandhu.

மேலும் நோய்வாய்ப்பட்ட குழந்தையை குழந்தைப் பராமரிப்பு மையத்திலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைப்பது அங்குள்ள மற்ற குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் கடமையின் அடிப்படையிலேயே உள்ளது என்றும் Jyoti Sandhu கூறுகிறார்.
இதேவேளை அடிக்கடி கை கழுவுதல் மற்றும் Fluஅல்லது gastroஆல் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளிடமிருந்து சமூக இடைவெளியைப் பேணுதல் பேன்றவை குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுவதிலிருந்து பாதுகாக்கும
அத்துடன் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தும் முக்கியமானது என்று Dr Saeedullah கூறுகிறார்.
சிறு குழந்தைகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடையே தொற்றுநோய் கட்டுப்பாட்டு பொறிமுறையாக குழந்தை பருவ தடுப்பூசிகளை Dr Saeedullah பரிந்துரைக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான early childhood education மையங்கள் பெடரல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசிகளை அங்கீகரிக்கின்றன என்று early childhood educator Jyoti Sandhu சொல்கிறார்.
சில பெற்றோர் தமது குழந்தைக்கு குறிப்பிட்ட சில தடுப்பூசிகளைப் போட வேண்டாம் என முடிவு செய்தால் அதுகுறித்த வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தம்மிடம் உள்ளதாக அவர் கூறுகிறார்.
Play centres போன்ற உள்ளக வசதிகளைக் காட்டிலும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற இயற்கைச் சூழல்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் என Jyoti Sandhu பரிந்துரைக்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








