இலங்கைக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் சையத் ராஅத் அல் ஹூசேன் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடவடிக்கை பற்றி கேட்டு அறிந்தார். அவ்வேளையில் போரினால் தங்கள் நிலங்களை இழந்து இன்றும் இடம்பெயர்ந்துவாழும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் சஜீவன் அவர்கள் அல் ஹூசேனிடம் மக்களின் நிலைமையை நேரில் எடுத்துக் கூறினார். அல் ஹூசேனுடன் என்ன பேசினீர்கள், அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று விளக்குகிறார் சஜீவன். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.