ஒரு புதிய சொற்றொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுன்கள். 'GOAT' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இருமொழித் தொடர்’ ஆகும்..
GOAT – இந்த சொற்பதத்தை நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கலாம். சொல்லப்போனால், GOAT (ஆடு) என்பது கொம்புகளும் தாடியும் கொண்ட ஒரு விலங்கு. ஆனால் ஒருவரை நாம் ஆங்கிலத்தில் GOAT என்று விவரிக்கும்போது, அவர் எந்தக் காலத்திலும் சிறந்தவர், அதாவது அவர் செய்யும் வேலையில் மிகச் சிறந்தவர் என்று அர்த்தம்.
ஆனால் தற்போது அந்த வார்த்தையை நீங்கள் பலவிதமான சூழ்நிலைகளிலும் கேட்பீர்கள்.
எந்தக் காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர்களைப் பற்றி பேசும்போது:
- Roanaldo சிறந்தவர் என்று நீங்கள் நினைப்பதை என்னால் நம்ப முடியவில்லை. Messi உலகக் கோப்பையை வென்றார்! அவர்தான் சந்தேகத்திற்கு இடமின்றி கால்பந்தின் GOAT.
வேலையில், ஒரு காரியத்தை மிகச் சிறப்பாகச் செய்த ஒருவரைக் குறிப்பிடுவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்:
- இன்று என் முதலாளி என்னை ஒரு மணி நேரம் தாமதமாக வர அனுமதித்தார் - அவர்தான் GOAT.
உங்களுக்கு உதவிய ஒருவரைப் பாராட்டவும் இந்த வார்த்தை பயனுள்ளதாக இருக்கும்:
- என் கணினியைச் சரிசெய்ததற்கு நன்றி. நீங்கள்தான் GOAT.
ஏதாவது ஒன்று மிகவும் நன்றாக அல்லது அற்புதமாக இருக்கிறது என்று சொல்ல, இதனை ஒரு பெயரடையாகப் பயன்படுத்தவும்:
- இந்த Pizza, Goated! (அட்டகாசமாக இருக்கிறது!) நாங்கள் அடுத்த வாரம் மீண்டும் வர வேண்டும்!
நீங்கள் நிகழ்பட விளையாட்டு (video games) விளையாடினால் இதுவும் பயனுள்ளதாக இருக்கும்:
- இந்த விளையாட்டு goated (மிகவும் அருமையானது).
நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் (Words we use) தொடர் முழுவதையும் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பங்களிப்பாளர்கள்
தொகுப்பாளர்: குலசேகரம் சஞ்சயன்
எழுதியவர்: நிக் பகானோ (Nick Pagano)
வரைபட வடிவமைப்பு: டோரி வாங் (Dory Wang)
கல்வி ஆலோசகர்: பேராசிரியர் லிண்டா யேட்ஸ் (Lynda Yates)
தயாரிப்பு: டோரி வாங்





