ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – ‘Keep your eye on the ball' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்.
‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ என்று பொருள்படும் ‘Keep your eye on the ball' என்ற சொற்றொடரை நீங்கள் இதற்கு முன்பு கேட்டிருக்கலாம். உண்மையில், கால்பந்து விளையாட்டில், ஆட்டத்தின் போது வீரர்கள் பந்தைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில், நாம் ‘Keep your eye on the ball' என்று கூறும்போது, அவதானத்துடன் இருப்பதையும், முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவதையும் குறிக்கிறோம்.
இன்று, நீங்கள் இதை பல விதமான சூழ்நிலைகளிலும் கேட்பீர்கள்.
விளையாட்டுகளில், வீரர்கள் கவனத்துடன் இருக்கவேண்டுமென்பதை நினைவூட்ட இந்த சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது:
- ‘Keep your eye on the ball' - ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’: எதிரணி (goal) கோல் அடிக்க விடாதீர்கள்!
கால்பந்து பயிற்சியாளர்களும் தங்கள் அணியை ஊக்குவிக்க இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்:
- இந்த ஆட்டத்தில் நம்மால் இன்னும் வெற்றி பெற முடியும். ‘Keep your eye on the ball' - ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்,’ ஈடுபாட்டுடன் விளையாடுங்கள்!
தங்கள் வீட்டுப்பாடத்தில் கவனம் செலுத்தாத குழந்தைகளிடமும் நீங்கள் இதைக் கூறலாம்:
- நீங்கள் கேள்வியைக் கவனமாகப் படிக்க வேண்டும்! ‘Keep your eye on the ball' - ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’
பணியிடத்தில் ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியிருக்கும் போதும் இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது:
- ‘Keep your eye on the ball' - ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்,’ இந்த அறிக்கையை நீங்கள் கெடுத்துவிடக் கூடாது!
நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒருவருக்குத் தெரிவிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்:
- என் கவனத்தைத் திசை திருப்பாதீர்கள். ‘I’m trying to keep my eye on the ball here,’ நான் என் வேலையில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.
நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் (Words we use) தொடர் முழுவதையும் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பங்களிப்பாளர்கள்
தொகுப்பாளர்: குலசேகரம் சஞ்சயன்
எழுதியவர்: நிக் பகானோ (Nick Pagano)
வரைபட வடிவமைப்பு: டோரி வாங் (Dory Wang)
கல்வி ஆலோசகர்: பேராசிரியர் லிண்டா யேட்ஸ் (Lynda Yates)
தயாரிப்பு: டோரி வாங்





