ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘Man on !' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்.
Man On! என்று ஒருவர் சத்தமாக கூச்சலிப்பதை நீங்கள் வழக்கமாகக் கேட்பீர்கள். கால்பந்து விளையாட்டில், மற்றொரு வீரர் அவர்களை நோக்கி வருகிறார் என்று ஒரு அணி வீரரை எச்சரிக்க இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அன்றாட ஆங்கிலத்தில், Man On! என்பது, ‘கவனியுங்கள், யாராவது உங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள்’ என்பதையும் இது குறிக்கலாம்.
இன்று, நீங்கள் இதை பல விதமான சூழ்நிலைகளிலும் கேட்பீர்கள்.
எதிரணி வீரர் அணுகுவது குறித்து அணியினரை எச்சரிக்க, கால்பந்து விளையாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது:
- Man On ! எண் 10 என்ற இலக்கமிடப்பட்ட வீரர் பின்னால் இருக்கிறார்
அந்த எச்சரிக்கையை எல்லோரும் கேட்பதை உறுதிப்படுத்த வீரர்கள் சில சமயங்களில் அதை சத்தமாக, பல தடவைகள் கூறக்கூடும்:
- Man On ! Man On ! Man On !
இந்த சொற்றொடரில் ‘மனிதன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், எல்லா பாலினத்தினரும் பொதுவாக அதைப் பயன்படுத்துகிறார்கள்:
- போட்டியின் போது தனது அணி தோழிகளை எச்சரிக்க, “Man On !” என்று அவள் கூச்சலிட்டாள்.
உணவகங்கள் போன்ற பரபரப்பான பணியிடங்களில் அல்லது நெரிசலான இடங்களிலும் நீங்கள் இதைக் கேட்கலாம்:
- Man On, Jenny ! உங்களுக்குப் பின்னால்!
நெரிசலான ஒரு இடத்திலும் நீங்கள் ஒருவருடன் மோதாமல் இருக்க இதைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு மதுபான அருந்தகத்தில் உங்கள் மேசைக்குப் பானங்களை எடுத்துச் செல்லும்போது, உங்களுக்கு முன்னால் உள்ளவர்களிடம் நீங்கள் சொல்லலாம்:
- Man On ! Coming through (ஆள் வருகிறார்) !
நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் (Words we use) தொடர் முழுவதையும் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பங்களிப்பாளர்கள்
தொகுப்பாளர்: குலசேகரம் சஞ்சயன்
எழுதியவர்: நிக் பகானோ (Nick Pagano)
வரைபட வடிவமைப்பு: டோரி வாங் (Dory Wang)
கல்வி ஆலோசகர்: பேராசிரியர் லிண்டா யேட்ஸ் (Lynda Yates)
தயாரிப்பு: டோரி வாங்





