ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் பெண் மேயர்
SBS tamil Source: SBS Tamil
விக்டோரிய மாநிலத்தலுள்ள மோர்லாண்ட் நகரின் மேயராக சமந்தா ரத்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த சமந்தா, போர் காரணமாக பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இவர், கிறீன்ஸ் கட்சியின் சார்பில், 2012ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சமந்த வெற்றியீட்ட/விட்டாலும் தொடர்ந்தும் முயற்சி செய்த இவர், தற்போது, மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இவர் தனது வாழ்க்கைப் பயணத்தை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.சமந்தா ரத்னம் மற்றும் அவரது தகப்பனாருடன் நேர்கண்டு உரையாடி நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
Share