“குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட வேண்டும்!”

Kavitha Suthanthiraraj, author of "Unseen, Unsafe" Source: SBS Tamil
பசிஃபிக் பிராந்தியத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வீட்டில் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். அங்கு செயற்படும் Save the Children, Child Fund, Plan International மற்றும் World Vision என்ற நான்கு அமைப்புகள் ஒன்றிணைந்து தயாரித்த அறிக்கையின் படி பசிஃபிக் தீவு நாடுகள் மற்றும் கிழக்குத் தீமோர் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளன. “கண்ணுக்குப் புலனாகாத, பாதுகாப்பற்ற” (“Unseen, Unsafe”) என்ற தலைப்பில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த அறிக்கையின் பிரதம ஆசிரியரான கவிதா சுதந்திரராஜ் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share