இலங்கையில் வாழும் மிகவும் வறிய மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களில் தேயிலைத் தோட்ட சமூகங்கள் ஒன்றாகும். பல ஆண்டுகளாக உழைப்பிற்கேற்ப ஊதியம் பெறாமல் வாழ்ந்து வரும் இவர்களது வழித் தோன்றல்கள், இன்றும் பல சிரமங்களுக்கிடையில் வாழ்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளிடையே ‘ஊட்டச்சத்து குறைபாடு’ ஒரு முக்கிய சுகாதார பேசு பொருளாக மாறியுள்ள வேளையில், இந்த சூழலில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை சிறந்த முறையில் ஆரம்பிக்க ஒரு சிறிய செயற்பாடு பெருமளவில் உதவிபுரிவதாகத் தெரிகிறது.
இது குறித்து, ஆராய்ச்சியை மேற்கொண்ட உடேனி டீ சில்வா பெரேரா, இந்த செயற் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கி வரும் MJF அறக்கட்டளையின் திரு. சுப்பிரமணியம் கமலநாதன், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மைய அதிகாரிகள் திருமதி கிருஷ்ணகுமாரி (Belghravia பிரிவு) திருமதி டிட்டோகுமாரி (Fairfield பிரிவு) மற்றும் திருமதி. என் புவனேஸ்வரி (Walaha பிரிவு) ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
உடேனி டீ சில்வா பெரேரா எமக்கு ஆங்கிலத்தில் வழங்கிய முழுமையான நேர்காணலை, கீழே உள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலம் கேட்கலாம்: