அப்படியான ஒரு கலைஞர், மெல்பேர்ணில் வசிக்கும் Lisa Young. Coco's Lunch மற்றும் Lisa Young Quartet என்று இரு இசைக்குழுக்களுடன் இணைந்திருக்கும் இந்த இசைக்கலைஞர், தன் இசைப்பயணம் பற்றியும், கொன்னக்கோல் இசை வடிவத்தில் அவருக்கு நாட்டம் எப்படி ஏற்பட்டது போன்ற விடயங்களை மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.
Coco's Lunch இசைக்குழு வாத்திய இசைக்கருவிகள் இல்லாமல் இசை படைக்கும் கலையான ஆக்கப்பல்லோ வடிவத்தை முன்னெடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய இசை அமைப்பு வடிவங்களில் இந்தக் குழு முன்னோடிகள் என்று பல விருதுகளை வாங்கியிருக்கிறார்கள்.
மாறுபட்ட இசை வெளிப்பாடுகளை ஆராய்ந்து, ஜாஸ் வடிவிலும் உலக இசைத்தொகுப்புகளிலும் தனித்துவ இசைப்படைப்புகளை இசைக்குழு Lisa Young Quartet முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த நேர்காணல் பத்து வருடங்களுக்கு முன்னர் (20/12/2013 அன்று) ஒலிபரப்பாகியது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.