SKIP TO MAIN CONTENT

நோபல் வென்ற இலக்கியவாதி பேட்ரிக் ஒயிட்!

Patrick White
Source: Remadevi

இலக்கியத்துறை சார்ந்த நோபல் பரிசினை பெற்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமைக்குரியவர் பேட்ரிக் விக்டர் மார்டிண்டேல் ஒயிட். பேட்ரிக் ஒயிட் என்று அழைக்கப்பட்ட இவர், புதினம், சிறு கதைகள் தொகுப்பு, சுயசரிதை, நாடகம், திரைக்கதை என இலக்கியத்தின் பக்கங்கள் அனைத்திலும் பங்களித்தவர். 1973-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றார். புதினம் மற்றும் நாடக எழுத்தாளராகிய பேட்ரிக் ஒயிட் அவர்கள் “உளவியலோடு காவியம் கலந்த கலையை இலக்கியத்தின் பெரும் பகுதியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்” என்று நோபல் பரிசினை வழங்கிய சுவீடிஷ் அகெடெமி குறிப்பிட்டது சிறப்பிற்குரியது. தமக்கு கிடைத்த பரிசு தொகை முழுவதையும் இலக்கியத்துறையில் பணியாற்றும் திறமை வாய்ந்தவர்களுக்கு உதவும் வகையில் பரிசு திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பல படைப்பாளிகள் பயன்பட செயதவர் பேட்ரிக் ஒயிட். இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now