AFL பல்லினக் கலாச்சார விழாவில் பறை! அனுமதி இலவசம்!!

Source: SBS Tamil
பறை தமிழர்களின் பாரம்பரிய இசைக் கலை. AFL பல்லினக் கலாச்சார விழாவில் பறை இசை நாளை ஒலிக்கப்போகிறது. பறை இசையை இந்த விழாவிலும் தொடர்ந்து நடைபெறும் பேரணியிலும் இசைக்கும் ஆஸ்திரேலியா தமிழ் கலையகத்தின் (Australia Tamil Arts) இசுமாயில் மீரான் அவர்களை நாம் சந்திக்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல். AFL பல்லினக் கலாச்சார விழா: சனிக்கிழமை (28 July); 12pm – 5:35pm இடம்: Spotless stadium , Sydney Olympic Park. தமிழ் மக்களையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஒரு பெரும் விழாவில் பறை மேள இசை ஒலிக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை என்கிறார் இசுமாயில் மீரான். இலவச நுழைவுச்சீட்டுகளுக்கு: http://www.gwsgiants.com.au/multicultural/free-ticketson
Share