SKIP TO MAIN CONTENT

கழிவு பிளாஸ்டிக் வென்று கொடுத்த பத்மஸ்ரீ விருது

Padma Shri recipient Prof. Rajagopalan Vasudevan
Padma Shri recipient Prof. Rajagopalan Vasudevan Source: SBS Tamil

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகள் பத்ம விருதுகள். பல்வேறு துறைகளில் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் இந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருது, தேர்ந்த துறையில் புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு, இந்திய ஜனாதிபதி 85 பத்ம விருதுகளை அறிவித்துள்ளார். அதில், ஆறு பேர் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள். பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன் தற்போது தியாகராஜர் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். வீதி நிர்மாணத்தில் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்த முடியும் என்பதை அவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்பின் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன். கழிவுப்பொருட்களை (முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை) நிர்வகிப்பதில் ஈடுபடும் பேராசிரியர் வாசுதேவனின் ஆராய்ச்சி அவருக்கு பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளது. பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்தப் பதிவையும் பார்க்கவும்: அமெரிக்க விஞ்ஞானிகளே வியந்து பார்க்கும் தமிழர்

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now