நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் அரசியல் கருத்துக்கள் உங்கள் நட்பு வட்டாரத்தை பாதித்திருக்கிறதா? அல்லது நீங்கள் முன்பு வாக்களித்த அரசியல் கட்சியுடன் இனி நீங்கள் உங்களை அடையாளப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதா ?
நிபுணர்கள் இந்த உணர்வை (political grief) என்று அழைக்கிறார்கள் — மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறார்கள்.
'Political Grief' ஊடகங்களிலும் பொதுச் சமூகத்திலும் அதிகரித்து வரும் பிளவுகளாக வெளிப்படுகிறது என்று RMIT University ஊடகம் மற்றும் தொடர்பியல் பள்ளியின் பேராசிரியர் Larissa ஹஜுர்த் SBS Examines-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
Political grief இதனால் ஏற்படும் மனவேதனை என்னவென்றால், ஒரே மாதிரியான கருத்துகள் மட்டுமே தொடர்ந்து ஒலிக்கும் சூழல்களில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள்.Professor Larissa Hjorth, School of Media and Communication, RMIT University
“ஒருவர் இடதுசாரி, ஒருவர் வலதுசாரி என்றால், அவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.
Grattan Institute வெளியிட்ட அறிக்கையில்,
ஆஸ்திரேலியாவில் அரசியல் பிளவு மற்ற சில ஜனநாயக நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்றும் மாற்று அரசியல் கருத்துகள் கொண்டவர்களுடன் நண்பராக இருக்க முடியாத சூழ்நிலை 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறுகின்றனர்.
குறைந்து வரும் வாய்ப்புகளாலும், அதிகரித்து வரும் அநீதியாலும், அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு ஆஸ்திரேலியர்கள் இடையே குறைந்து வருகிறது என்று Grattan நிறுவனத்தை சேர்ந்த Kate Griffiths கூறுகிறார்.
நிகழ்ச்சியின் இந்த அத்தியாயத்தில், ‘political grief ‘பற்றி ஆராய்வதுடன், சில ஆஸ்திரேலியர்களின் அனுபவங்களையும் கேட்கலாம்.
இந்த அத்தியாயம் SBS Mandarin உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
How does political grief affect social cohesion?
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand





