எனவே, அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு ஆபத்தை உருவாக்கிய அல்லது ஆபத்தை உருவாக்கும் ஆஸ்திரேலிய அரசியல் சட்டப் பிரிவு - Section 44 i ஐ நீக்கி நாடாளுமன்றம் செல்ல இரட்டைக் குடியுரிமை ஒரு தடையல்ல என்று புதிய சட்டம் எழுதுவதா அல்லது இப்போதைய சட்டத்தை தொடர்வதா? இந்த கேள்வி இன்று பல மட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கலாமா?
Raj Source: Raj
கடந்த நான்கு வாரங்களில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற சென்டர்களில் பதவி விலகல் பெரும் அரசியல் சூறாவளியை நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. முதலில் Greens கட்சியின் செனட்டர் Larissa Waters தொடர்ந்து Greens கட்சியின் செனட்டர் Scott Ludlam, அதனைத் தொடர்ந்து Nationals கட்சியின் அமைச்சர் Matt Canavan அமைச்சர் பதிவி விலகல், அதனைத் தொடர்ந்து One Nation கட்சியின் செனட்டர் Malcolm Roberts யின் தகுதி குறித்த கேள்வி, இன்று விக்டோரிய மாநிலத்தைச் சார்ந்த பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் Julia Banks யின் தகுதி குறித்த கேள்வி. இப்படி இந்த பட்டியல் தொடர்கிறது.
Share