யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணையில், தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எவ்வாறு கண்காணித்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து சமூக ஊடக நிறுவனங்கள் விளக்கமளிக்க வேண்டியிருந்தது. ஆனால், எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நமக்கு இன்னும் முழுமையான தகவல்கள் தெரியவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் பெரும்பாலான நடவடிக்கைகள் வெளிப்படையாகத் தெரியாத வகையில் நடைபெறுவதாக Queensland University of Technology-யின் Digital Media Research Centre-ஐச் சேர்ந்த பேராசிரியர் Daniel Angus SBS Examines-இடம் தெரிவித்தார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்கும் கட்டாயப் பொறுப்பு சமூக ஊடகத் தளங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகத் தளங்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் செயல்படுவதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளன.Prof Daniel Angus, director of the Digital Media Research Centre, Queensland University of Technology
தீங்கு விளைவிக்கும் மற்றும் வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்கள் பரவத் தொடங்குவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் பொறுப்பை சமூக ஊடக நிறுவனங்களிடமே ஒப்படைக்கும் வகையில் 'Digital Duty of Care' என்ற சட்டத்தை இயற்ற பெடரல் அரசு உறுதியளித்துள்ளது.
எனினும், இந்தச் சட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று ராயல் கமிஷன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் SBS Examines-இன் இந்த அத்தியாயத்தில் சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்கும் பொறுப்பு யாருடையது? அதை உண்மையிலேயே தடுக்க முடியுமா? என்பதை பற்றி ஆராய்வோம்.
ஆங்கிலத்தில் SBS Punjabi-இன் Jasmeet Kaur உடன் இணைந்து Lera Shvets தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.





